புதிதாக அமைக்கப்பட்ட வடகிழக்கு பிராந்தியத்திற்கான நிதி ஆயோக் மன்றத்தின் முதல் சந்திப்பு அண்மையில் திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவில் நடைபெற்றது.
வடகிழக்கு மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களை ஊக்குவிப்பதற்கான வழிகளை விவாதிப்பதற்காக இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தின் மேம்பாட்டிற்கான இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் இச்சந்திப்பிற்கு தலைமையேற்றனர்.
2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வடகிழக்கு பிராந்தியத்திற்கான நிதி ஆயோக் மன்றம் அமைக்கப்பட்டது.
இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தின் நீடித்த பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் வடகிழக்கு பிராந்தியத்தில் வளர்ச்சித் திட்டங்களின் அந்தஸ்தை மதிப்பாய்வு செய்வதும் இதன் நோக்கங்களாகும்.