TNPSC Thervupettagam

வடக்குப்பட்டு அகழாய்வு குறித்த அறிக்கை

October 27 , 2024 34 days 138 0
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வடக்குப்பட்டு என்ற கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சிகள் பற்றிய 700 பக்க விரிவான இறுதி அறிக்கையானது இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) தலைமை இயக்குனரிடம் சமர்ப்பிக்கப் பட்டு உள்ளது.
  • கீழை பாலாற்றின் பள்ளத்தாக்கு என்ற ஒரு பழங்கற்காலப் பகுதியின் முழுமையான வரலாறு மற்றும் தகவல்களை அறிவதே இதன் நோக்கமாக இருந்தது.
  • முதல் கட்ட அகழாய்வு ஆனது 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கியது என்ற நிலையில் அதில் ஒன்பது அகழிகள் தோண்டப் பட்டன.
  • 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில், ASI ஆனது மேலும் 12 இடங்களில் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டது.
  • அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டப் பொருட்கள், இந்தத் தளம் இடைக் கற்கால யுகத்தைச் சேர்ந்தது என்றும், வரலாற்றுக்கு முந்தைய மற்றும் வரலாற்று (பல்லவர்) காலங்களில் செழித்து வளர்ந்தது என்றும் தெரிய வந்துள்ளது.
  • அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் குறிப்பிடத்தக்க பழங்காலப் பொருட்களில் ஒன்று ‘மட்டி’ எனப்படுகின்ற தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட பானை ஓடுகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்