TNPSC Thervupettagam

வடக்கு நதி டெராபின் ஆமைகள்

July 23 , 2017 2681 days 1146 0
  • டெராபின் எனும் சிறிய ஆமை இனம் நன்னீர் அல்லது உவநீரில் வாழும்.
  • படாகுர் பஸ்கா (Batagur Baska)என்று பொதுவாக அழைக்கப்படும் டெராபின் இன ஆமைகள் ஆற்று நீரில் வாழ்வன. இவை தென் கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை.
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN), இதனை அழிந்து வரும் தருவாயில் உள்ள உயிரினங்கள் (Critically Endangered - CR)என்று வகைப்படுத்தியுள்ளது.
  • இந்த இனங்கள் தற்போது வங்காளதேசம் (சுந்தரவனக் காடுகள்), இந்தியா (மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா), இந்தோனேசியா, கம்போடியா மற்றும் மலேசியா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
  • டெராபின் ஆமை வகையானது அனைத்துண்ணிகளாகும். மேலும் இவை நன்னீர் வாழிடங்களை விரும்புகின்றன.
  • இனப்பெருக்கப் பருவத்தில் ( டிசம்பர் - மார்ச் ) உவர் நிலங்களுக்கோ அல்லது அவற்றின் முகத்துவாரங்களுக்கோ இடம்பெயர்ந்து தங்களது முட்டைகளை இட்டுச் செல்கின்றன.
  • சுந்தரவனக் காடுகள் புலிகள் காப்பகத்தில், இந்த ஆமைகளை இயற்கையான அபாயங்களில் இருந்து காப்பதற்கும், இவற்றின் மரபணு மேலாண்மைக்கும், இனப்பெருக்கத் திட்டமொன்றை அரசு செயல்படுத்திப் பாதுகாத்து வருகிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்