வடிவமைப்பின் அடிப்படையில் பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு அமைப்புகள்
December 1 , 2023 360 days 218 0
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சில நாடுகள் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு தொடர்பான முதல் விரிவான சர்வதேச ஒப்பந்தத்தினை வெளியிட்டுள்ளன.
மோசமான நடவடிக்கையில் ஈடுபடும் அமைப்புகளிடம் இருந்து செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது தொடர்பான அம்சங்களை இது கையாளச் செய்வதோடு, மேலும், “வடிவமைப்பின் அடிப்படையில் பாதுகாப்பான” செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்க நிறுவனங்களுக்கு இது அழுத்தமும் கொடுக்கிறது.
செயற்கை நுண்ணறிவினை வடிவமைத்துப் பயன்படுத்தும் நிறுவனங்கள் ஆனது, வாடிக்கையாளர்களையும், பொதுமக்களையும் தவறான நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் அவற்றை உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும் என்று 18 நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் ஆனது பிணைப்பு சார்ந்தது அல்ல. மேலும், செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் முறைகேடானப் பயன்பாட்டினைக் கண்காணித்தல், மென்பொருள் வழங்கீட்டு நிறுவனங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் சேதப்படுத்துதலிலிருந்து தரவுகளைப் பாதுகாத்தல் போன்ற பொதுவான பரிந்துரைகளைக் கொண்டுள்ளது.