பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையானது 2020 ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று மூலதனம் மற்றும் இடர் உண்டாக்கும் சொத்துக்களின் விகிதத்தை (CRAR - Capital to Risk weighted Assets Ratio) மேம்படுத்துவதற்காக வட்டார கிராம வங்கிகளின் (RRB - Regional Rural Banks) மறுமூலதனமாக்கத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட CRAR ஆனது கிராமப் பகுதிகளில் RRBகளின் கடன் வழங்கும் திறனைப் பூர்த்தி செய்ய உதவும்.
RRBகள் தனது கடன் வழங்குதலில் முன்னுரிமைத் துறைக் கடனுக்கு 75% நிதியை அளிக்க வேண்டும்.
இந்த மறுமூலதன நிதியானது 9% என்ற குறைந்தபட்ச CRAR விகிதத்தை நிர்வகிக்காத வங்கிகளுக்கு அளிக்கப்பட இருக்கின்றது.
ஒரு வங்கிக்கான CRAR ஆனது இந்திய ரிசர்வ் வங்கியினால் நிர்ணயிக்கப் படுகின்றது.
RRBகளின் மறுமூலதனமாக்கல் என்ற திட்டமானது 2011 ஆம் ஆண்டில் டாக்டர்.கே.சி. சக்கரபர்த்தி குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தொடங்கப் பட்டுள்ளது.