TNPSC Thervupettagam

வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு சாராத முக்கிய நட்பு நாடு அந்தஸ்து

September 28 , 2022 664 days 279 0
  • அமெரிக்க அதிபர் ஜோ பிடன், வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு சாராத முக்கிய நட்பு நாடு என்ற அந்தஸ்திலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டினை விலக்கியுள்ளார்.
  • தாலிபான்கள் அமைப்பானது, ஒரு வருடத்திற்கு முன்பு காபூல் நகரில் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
  • 2012 ஆம் ஆண்டில் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் நாட்டினை ஒரு முக்கிய வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பினைச் சாராத நட்பு நாடாக அறிவித்தது.
  • இது இரு நாடுகளும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவைப் பேணுவதற்கான வழியினை வகுத்தது.
  • இந்த அந்தஸ்தானது ஆப்கானிஸ்தான் நாட்டிற்குப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான உதவி மற்றும் உபகரணங்களின் அடிப்படையில் பல வசதிகள் மற்றும் சலுகைகளை வழங்கியது.
  • வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு சாராத முக்கிய நட்பு நாடு என்ற அந்தஸ்தானது முதன்முதலில் 1987  ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு வழங்கப்பட்ட இந்த அந்தஸ்து திரும்பப் பெறப் பட்டால், 18 முக்கிய வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு சாராத முக்கிய நட்பு நாடுகளை அமெரிக்கா கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்