முழுநேர விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமானது வடஇந்தியாவில் முதன்முறையாக ஜம்மு நகரில் அமைக்கப்படவுள்ளது. இது ஆராய்ச்சிக் கல்வி மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான மற்றுமொரு நகரம் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது அகர்தலாவில் உள்ள தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தின் (NIT – National Institute of Technology) கீழ் செயல்படும்.