இந்த ஆண்டின் வடகிழக்குப் பருவமழை அதிக அளவில் பெய்து நிறைவடைந்துள்ளது. இந்தப் பருவத்தின் மொத்த மழைப்பொழிவு வழக்கத்தை விட 30 சதவீதம் உபரியாகப் பதிவாகியுள்ளது.
அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழைக்கான காலமாக இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department - IMD) அங்கீகரிக்கின்றது.
இந்தக் காலகட்டத்தில், தமிழகம், கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் மழை பெய்யும்.
2019 ஆம் ஆண்டானது வட இந்தியப் பெருங்கடல் சூறாவளி பருவங்களில் மிகுந்த செயல்பாடு கொண்ட ஒன்றாகப் பதிவாகியுள்ளது.
இந்தியாவிலும் அதைச் சுற்றிலும் எட்டு சூறாவளிப் புயல்கள் உருவாகின. 1976 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒரே ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான சூறாவளிகள் இங்கு உருவாகியுள்ளன.