TNPSC Thervupettagam

வட கோயல் நீர்த்தேக்கத் திட்டம்

August 18 , 2017 2655 days 1047 0
  • ஜார்க்கண்ட் மற்றும் பீஹாரில் வட கொயல் நீர்த்தேக்க திட்டம் முடிக்கப்படுவதற்கான ஒப்புதலை அமைச்சரை வழிங்கியுள்ளது.
  • பீஹார் மாநிலத்தின் கயா மற்றும் ஔரங்கபாத் மாவட்டங்கள் , ஜார்க்கண்ட் மாநிலத்தின் பாலமு மற்றம் கர்வா (Palamu & Garhwa ) போன்ற பின்தங்கிய மற்றும் வறட்சி மாவட்டங்களில் பாசன நீர் வசதியை ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
  • ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி பீடபூமியில் வட கொயல் நதி உருவாகிறது.
  • சோனா ஆற்றின் கிளை நதியான இது பீஹாரில் கங்கை நதியில் இணைகிறது.
  • ஜார்கண்ட் மாநிலத்தில் “ மண்டல் அணை”என்ற பெயரால் அணை கட்டுவதையே இத்திட்டத்தின் நெடு நோக்கமாக கொண்டுள்ளது.
  • கொயல் மற்றும் அவற்றின் கிளை ஆறுகள் பெத்லா தேசியப் பூங்காவின் வடபகுதியில் பாய்கின்றன.
  • இந்த நீர்த்தேக்க திட்டமனது பலாமா புலிகள் காப்பகத்திலுள்ள கிராமங்களை வெள்ள அபாயத்திலிருந்து பாதுகாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • நீரில் மூழ்குதலைக் குறைப்பதன் மூலம் மண்டல் அணையின் சேமிப்புத் திறனை கட்டுப்படுத்தி பெட்லா தேசியப் பூங்கா மற்றும் பலாமா புலிகள் காப்பகம் ஆகியவற்றை பாதுகாக்கும்படி இந்திய அரசு கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்