TNPSC Thervupettagam

வணிகக் கப்பல் போக்குவரத்து மசோதா, 2024

December 14 , 2024 14 days 73 0
  • 2024 ஆம் ஆண்டு வணிகக் கப்பல் போக்குவரத்து மசோதாவானது, 1958 ஆம் ஆண்டு வணிகக் கப்பல் போக்குவரத்து சட்டத்தினை ரத்து செய்ய முனைகிறது.
  • இந்த மசோதாவானது, நாட்டில் உள்ள வணிகக் கப்பல்களுக்கான பல உரிமைகள்  தொடர்பான விதிமுறைகளை மறுவரையறை செய்து எளிதாக்குகிறது.
  • தற்போது வரையில், ​​இந்தியக் குடிமக்கள் அல்லது நிறுவனங்கள் மட்டுமே இந்தியக் கொடியினை ஏந்தியக் கப்பல்களை இயக்குவதற்குப் பதிவு செய்ய முடியும்.
  • இது இந்தியக் கொடியிடப்பட்ட கப்பல்களை இயக்குவதை எளிதாக்குகிறது. மேலும் கடல்களில் ஏற்படும் உயிரிழப்புகளைக் கையாளும் பல்வேறு விதிமுறைகளை மிக நன்கு ஒழுங்குபடுத்துகிறது.
  • இந்தியக் கொடியினைக் கொண்ட கப்பல்களின் உரிமை மற்றும் சரக்கு ஏற்றும் டன் அளவினை அதிகரிப்பதற்கான சில தகுதி அளவுருக்களை விரிவுபடுத்தச் செய்வதற்கு இதில் முன்மொழியப் பட்டுள்ளது.
  • இந்தியாவில் மறுசுழற்சி செய்ய விரும்பும் கப்பல்களைத் தற்காலிகமாகப் பதிவு செய்வதற்கும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.
  • இது சில உரிமைக் கோரல்களுக்கான வரம்பு நிதியை உருவாக்குவதோடு, மின்னணுப் பதிவு மற்றும் எண்ணிமப் பதிவுகளுடன் கூடிய நிர்வாகச் செயல்முறைகளை நெறிப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்