வணிகத்தில் மிகவும் அதிகாரம் வாய்ந்த 100 பெண்களின் பட்டியல் 2024
October 20 , 2024 421 days 394 0
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பார்ரா, 27 வது வருடாந்திர மிகவும் அதிகாரம் வாய்ந்த பெண்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
அவரைத் தொடர்ந்து CVS ஹெல்த் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கரேன் லிஞ்ச் மற்றும் சிட்டிகுரூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேன் ஃப்ரேசர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதில் சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற 11 ஆசிய-பசிபிக் நாடுகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் உள்ள இடம் பெற்றுள்ள இந்தியப் பெண் வணிகத் தலைவர்கள்: இஷா அம்பானி, ரோஷ்னி நாடார், மெட்டா இந்தியா நிறுவனத்தின் சந்தியா தேவ நாதன், அருந்ததி பட்டாச்சார்யா, ஃபால்குனி நாயர் மற்றும் சிலர்.