வணிக நம்பிக்கைக்கான குறியீட்டு தர வரிசை – இந்தியா ஏழாவது இடத்திற்கு சரிவு
November 10 , 2017 2600 days 929 0
வணிக நம்பிக்கைக்கான குறியீட்டில் செப்டம்பர் மாதத்தோடு முடிவடைந்த காலாண்டில் இந்தியா, இதற்கு முந்தைய காலாண்டின் 2வது இடத்திலிருந்து தற்சமயம் 7வது இடத்திற்கு சரிந்துள்ளது.
இந்த சரிவு பொருளாதாரத்தில் சுணக்கம் இருப்பதற்கான அறிகுறிகளை தெளிவாக காட்டுகிறது.
கிராண்ட் கார்டானின் சர்வதேச வணிக அறிக்கையின் அடிப்படையின் படி இந்தோனசியா முதலிடத்திலும், பின்லாந்து, நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் முறையே 2வது, 3வது, 4வது, 5வது மற்றும் 6வது இடங்களையும் வகிக்கின்றன.