TNPSC Thervupettagam

வண்ணத்துப்பூச்சி வடிவிலான கண்ணிவெடி

August 13 , 2022 710 days 376 0
  • PFM-1 ரக ‘வண்ணத்துப்பூச்சி வடிவிலான கண்ணிவெடியினை' ரஷ்ய நாட்டு ராணுவம் பயன்படுத்துவது குறித்த சாத்தியக் கூறுகள் பற்றி ஐக்கிய இராஜ்ஜியம் எச்சரித்தது.
  • வண்ணத்துப்பூச்சி வடிவிலான கண்ணிவெடிகள் இராணுவம் மற்றும் உள்ளூர்ப் பொது மக்களிடையே பெருமளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் திறன் கொண்டவை ஆகும்.
  • முன்னதாக, சோவியத்-ஆப்கான் இடையிலான போரில் PFM-1 ரக கண்ணிவெடிகள் பயன்படுத்தப்பட்டன.
  • PFM-1 மற்றும் PFM-1S மனிதர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் கண்ணிவெடிகள் பொதுவாக 'வண்ணத்துப்பூச்சி வடிவிலான கண்ணிவெடிகள் அல்லது 'கிரீன் பாராட்ஸ்' என்று அழைக்கப் படுகின்றன.
  • அவற்றின் வடிவம் மற்றும் நிறத்தின் காரணமாக இது இப்பெயர் பெற்றது.
  • வண்ணத்துப்பூச்சி வடிவிலான வெடிகுண்டுகள் வண்ணமயமான பொம்மையைப் போன்று இருப்பதால் இது குழந்தைகளைக் கவர்கிறது.
  • இவற்றைத் தொடுவதன் மூலம் அவை வெடிக்கும் அளவிற்கு அது மிகவும் உணர்திறன் கொண்டவையாக இருப்பதோடு அவற்றை எடுப்பதன் மூலமும் இவற்றை வெடிக்கச் செய்யலாம்.
  • இவை நெகிழிப் பொருளால் ஆனவை என்பதால் அதனைக் கண்டறிவது மிகக் கடினம் ஆகும்.
  • மேலும், இது உலோகக் கண்டறிவு கருவிகளுக்குப் புலப்படாத திறன் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்