துறையூர் அருகேயுள்ள பச்சமலையில் வண்ணத்துப் பூச்சி இனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமீபத்தியக் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டு உள்ளது.
2016 ஆம் ஆண்டில் 15 இனங்களும் 2022 ஆம் ஆண்டில் 109 இனங்களும் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போதையக் கணக்கெடுப்பில் அவற்றில் 126 இனங்கள் இந்த மலைகளில் கண்டறியப்பட்டுள்ளன.
பச்சமலைக் குன்றுகள் பல காப்புக் காடுகளை உள்ளடக்கியதாகும்.
இது செங்காட்டுப்பட்டி நீட்சி, காளியம்மன் கோவில் திட்டு, சோலமதி, கன்னிமார் சோலை, சுற்றுச்சூழல் சார் சுற்றுலாப் பூங்கா பகுதி (மேல் மட்ட செங்காட்டுப்பட்டி) மற்றும் மங்கலம் நீர்வீழ்ச்சி பகுதியின் காப்புக்காடுகளை உள்ளடக்கியது.
வாழ்விட மதிப்பீடு ஆனது, கலப்பு இலையுதிர் காடுகள், நதிக்கரை மற்றும் இரண்டாம் நிலை காடுகளின் வளர்ச்சியை உள்ளடக்கியது.
சுமார் 126 இனங்களின் ஒரு எண்ணிக்கையானது வளமான வண்ணத்துப் பூச்சியின் எண்ணிக்கை என அழைக்கப்படுகிறது.
இந்த மலைக் குன்றுகள் ஆனது 175 வண்ணத்துப் பூச்சி இனங்களைக் கொண்டிருக்கும் ஆற்றல் கொண்டது.