TNPSC Thervupettagam

வனங்களின் நிலை குறித்த அறிக்கை - 2019

January 1 , 2020 1663 days 2218 0
  • மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சரான பிரகாஷ் ஜவ்டேகர் 2019 ஆம் ஆண்டின் வனங்களின் நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
  • இது 2003 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒரு முறை வெளியிடப் படுகின்றது.
  • இது டேராடூனில் உள்ள இந்திய வனக் கணக்கெடுப்பு நிறுவனத்தினால் (Forest Survey of India - FSI) தயாரிக்கப் பட்டுள்ளது.
  • இது காடு மற்றும் மரம், மூங்கில் வளங்கள், கார்பன் இருப்பு & காட்டுத் தீ ஆகியவற்றை மதிப்பிடுகின்றது.
  • இந்த அறிக்கையின் படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் வனப் பரப்பானது 5,188 சதுர கி.மீ அதிகரித்துள்ளது.
  • இருப்பினும், வனப் பகுதியின் இந்த அதிகரிப்பானது வனப் பகுதிக்கு வெளியே நிகழ்ந்து உள்ளது.
  • 2017 ஆம் ஆண்டிலிருந்து வனப் பகுதியில் 301 சதுர கி.மீ அடர்த்தியான காடுகளின் அதிகரிப்பு மட்டுமே நடந்துள்ளது.
  • கடந்த இரண்டு ஆண்டுகளில் 2,145 சதுர கி.மீ அடர்த்தியான காடுகளின் இழப்பு நடந்துள்ளது. இந்தக் காடுகள் வனங்கள் அல்லாதவையாக மாறியுள்ளன.
  • அடர்த்தியான காடுகள் மரங்கள் பரப்பின்  (canopy) மூலம் வரையறுக்கப் படுகின்றன: 70%க்கும் அதிகமான வனங்கள் மிகவும் அடர்த்தியானதாகவும் 40 - 70% வனங்கள் நடுத்தர அடர்த்தியானதாகவும் கருதப்படுகின்றன.
  • இயற்கை வனங்களைப் போலன்றி, வணிகத் தோட்டங்கள் வேகமாக வளர்ந்து செயற்கைக் கோள் படங்களில் அவை அடர்த்தியான பரப்பாகக் காட்டப்படுகின்றன.
  • 2019 ஆம் ஆண்டு மதிப்பீட்டில் முதன்முறையாக காடுகளில் உள்ள தாவர இனங்களின் பல்லுயிர் தன்மையும் மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது.
  • மர இன வளங்களின் அடிப்படையில் 325 வகை மர இனங்களுடன் கர்நாடகா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதில் கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழ்நாடு (252 இனங்கள்), ஆந்திரா (242 இனங்கள்), கேரளா (238 இனங்கள்) மற்றும் ஒடிசா (192 இனங்கள்) ஆகிய மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளன.
  • தாவர இன வளங்களின் அடிப்படையில் 737 வகை தாவர இனங்களுடன் அருணாச்சலப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இதில் அருணாச்சலப் பிரதேசத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு (652 இனங்கள்), கர்நாடகா (505 இனங்கள்), ஜம்மு காஷ்மீர் (478 இனங்கள்) மற்றும் கேரளா (477 இனங்கள்) ஆகிய மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளன.

ISFR 2019ன் முக்கிய அம்சங்கள்

  • நாட்டின் மொத்த வன மற்றும் மரங்களின் பரப்பளவு 8,07,276 சதுர கி.மீ ஆகும். இது நாட்டின் புவியியல் பரப்பளவில் 24.56% ஆகும்.
  • இது தேசிய வனக் கொள்கை, 1988ல் குறிப்பிடப் பட்டுள்ளதை விட குறைவான சதவிகிதமாகும். இக்கொள்கையில் வனங்களின் பரப்பானது 33% எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
  • நாட்டின் மொத்த வனப்பகுதி 7,12,249 சதுர கி.மீ ஆகும். இது நாட்டின் புவியியல் பரப்பளவில் 21.67% ஆகும்.
  • நாட்டின் மரங்களின் பரப்பளவு 95,027 சதுர கி.மீ என மதிப்பிடப்பட்டுள்ளது.  இது புவியியல் பரப்பளவில் 2.89% ஆகும்.
  • நாட்டில் 42.6 மில்லியன் டன் கார்பன் இருப்பு அதிகரித்துள்ளது.
  • இந்த அறிக்கையின் படி, நாட்டில் 7124 மில்லியன் டன் கார்பன் இருப்பு பதிவு செய்யப் பட்டுள்ளது.
  • நாட்டில் சதுப்பு நிலப் பகுதியானது 54 சதுர கி.மீ (1.10%) அதிகரித்துள்ளது.
  • இது குஜராத் (37 சதுர கி.மீ), மகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவில் அதிகரித்துள்ளது.
  • மொத்த சதுப்பு நிலப் பகுதியானது 4975 சதுர கிலோமீட்டராக பதிவு செய்யப் பட்டுள்ளது.
  • மேற்கு வங்கமானது 42.45% சதுப்பு நிலப் பகுதியைக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் 23.66% சதுப்பு நிலப் பகுதியையும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் 12.39% சதுப்பு நிலப் பகுதியையும் கொண்டுள்ளன.
  • நாட்டில் மூங்கிலைக் கொண்டுள்ள மொத்த பகுதி 1,60,037 சதுர கி.மீ என்று கணிக்கப் பட்டுள்ளது.
  • மூங்கிலைக் கொண்டுள்ள பகுதியில் 3,229 சதுர கி.மீ அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது.
  • மூங்கில் ஆனது புல் என மறுவகைப் படுத்தப்பட்டதால் இந்த அதிகரிப்பு நடந்துள்ளது.
  • இந்த மூங்கிலை வெட்டி மீண்டும் நடவு செய்யலாம்.
  • மண் கரிமக் கார்பன் (Soil Organic Carbon - SOC) ஆனது காடுகளில் உள்ள மிகப்பெரிய கார்பன் இருப்பைக் குறிக்கின்றது. இது 4,004 மில்லியன் டன்கள் என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • நாட்டின் மொத்த வனக் கார்பன் இருப்பில் SOC ஆனது 56% கார்பன் இருப்பைக் கொண்டுள்ளது.

மாநிலங்கள் குறித்த தரவு

  • காடுகள் பரப்பு அதிகரிப்பின் அடிப்படையில் முன்னணியில் உள்ள ஐந்து மாநிலங்கள் /ஒன்றியப் பிரதேசங்கள் பின்வருமாறு: கர்நாடகா (1,025 சதுர கி.மீ), ஆந்திரப் பிரதேசம் (990 சதுர கி.மீ), கேரளா (823 சதுர கி.மீ), ஜம்மு காஷ்மீர் (371 சதுர கி.மீ) மற்றும் இமாச்சலப் பிரதேசம் (334 சதுர கி.மீ) ஆகும்.
  • காடுகள் பரப்பின் அதிகரிப்பில் அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
  • வட கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மொத்த வனப் பகுதி 1,70,541 சதுர கி.மீ ஆகும். இது அதன் புவியியல் பரப்பளவில் 65.05% ஆகும்.
  • அசாம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களைத் தவிர, அந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களிலும்  உள்ள வனப்பகுதிகள் குறைந்து கொண்டே வருகின்றன (765 சதுர கி.மீ - 0.45 சதவீதம்).
  • பாரம்பரிய வேளாண்மை நடைமுறையான நாடோடி வேளாண்மையின் (ஜும் சாகுபடி) காரணமாக வடகிழக்கில் வனங்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
  • நாட்டில் 62,466 ஈரநிலங்கள் உள்ளன. இது நாட்டில் உள்ள மொத்தப் பரப்பில் 3.83% பரப்பளவைக் கொண்டுள்ளது.
  • இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே குஜராத்தில் அதிக ஈரநிலங்கள் உள்ளன. இதைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் அதிக ஈர நிலப்பகுதிகள் உள்ளன.
  • மகாராஷ்டிரா மாநிலம் காடுகளில் கிடைக்கும் எரிபொருள் சார்ந்த மரத்தை மிக அதிக அளவில் சார்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காடுகளில் கிடைக்கும் எரிபொருள் சார்ந்த மரத்தைச் சார்ந்திருப்பது அதிகமாகும்.
  • தீவனம், சிறிய மரம் மற்றும் மூங்கில் ஆகியவற்றைச் சார்ந்து இருப்பதில் மத்தியப் பிரதேச மாநிலம் முன்னணியில் உள்ளது.

தமிழ்நாடு

  • தமிழ்நாடு அதன் மொத்த பசுமைப் பரப்பில் 83.02 சதுர கி.மீ பரப்பை  அதிகரித்துள்ளது.
  • மாநிலத்தின் ஒட்டு மொத்த பசுமைப் பரப்பானது தற்போது அதன் புவியியல் பரப்பளவில் 20% ஆக உள்ளது (இலக்கு 33 சதவிகிதம்).
  • தமிழ்நாட்டில் சதுப்புநில வனப்பகுதியின் கீழ் உள்ள பகுதியானது நான்கு சதுர கி.மீ ஆகக் குறைந்துள்ளது.
  • தமிழ்நாட்டின் சதுப்பு நிலப் பரப்பானது 45 சதுர கி.மீ இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

வனப் பரப்பு

  • மொத்த புவியியல் பரப்பில் வனப்பகுதியின் சதவிகிதம்: முதலில் உள்ள ஐந்து மாநிலங்கள் பின்வருமாறு - மிசோரம் (85.41%), அருணாச்சலப் பிரதேசம் (79.63%), மேகாலயா (76.33%), மணிப்பூர் (75.46%) மற்றும் நாகாலாந்து (75.31%) ஆகியவை ஆகும்.

 

தர வரிசை

வனப் பரப்பில் முதலில் உள்ள மூன்று மாநிலங்கள்

பகுதி வாரியாக அதிக அளவில் வனப்பகுதிகளைக் கொண்டுள்ள மாநிலங்கள்

சதுப்பு நிலப்பரப்பு உயர்வு

1

கர்நாடகா (1025 சதுர கிமீ)

மத்தியப் பிரதேசம்

 குஜராத் – 37 சதுர கிமீ

2

ஆந்திரப் பிரதேசம் (990 சதுர கிமீ)

அருணாச்சலப் பிரதேசம்

மகாராஷ்டிரா - 16 சதுர கிமீ

3

கேரளா (823 சதுர கிமீ)

சத்தீஸ்கர்

ஒடிசா - 837 சதுர கிமீ

4

 

ஒடிசா

 

5

 

மகாராஷ்டிரா

 

Rajkumar May 13, 2021

Sir my mail id jon panivedhga

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்