TNPSC Thervupettagam

வனச் சான்றிதழ் திட்டம்

December 16 , 2023 218 days 148 0
  • இந்தத் தேசிய வனச் சான்றிதழ் திட்டமானது, நாட்டில் நிலையான வன மேலாண்மை மற்றும் வேளாண் காடுகளை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட தன்னார்வ மூன்றாம் தரப்பு சான்றிதழை வழங்குகிறது.
  • இந்த் திட்டத்தில் வன மேலாண்மைச் சான்றிதழ், வன மேலாண்மைக்கு அப்பாற்பட்ட மரங்களுக்கான சான்றிதழ் மற்றும் பாதுகாப்புத் தொடரமைப்பு சான்றிதழ் ஆகியவை அடங்கும்.
  • இது தங்கள் செயல்பாடுகளில் பொறுப்புமிகு வன மேலாண்மை மற்றும் வேளாண் காடு வளர்ப்பு நடைமுறைகளை கடைபிடிக்கும் பல்வேறு நிறுவனங்களுக்குச் சந்தை சார் ஊக்க மானியங்களை வழங்குகிறது.
  • வன மேலாண்மைச் சான்றிதழானது 8 அளவுருக்கள், 69 குறிகாட்டிகள் மற்றும் 254 சரி பார்ப்பு விதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய வன மேலாண்மை தரநிலையை அடிப்படையாகக் கொண்டது.
  • இது 2023 ஆம் ஆண்டு தேசியப் பணித் திட்டக் குறியீட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும்.
  • வன மேலாண்மைக்கு அப்பாற்பட்டு அமைந்த மரங்கள் என்ற தனித் தரநிலையானது, தற்போது புதிதாக தொடங்கப்பட்ட இந்திய வனம் மற்றும் மரச் சான்றிதழ் திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்