TNPSC Thervupettagam

வனப் பிரகடன மதிப்பீடு 2022

November 5 , 2022 624 days 342 0
  • உலகளவில் காடழிப்பு விகிதமானது 2018-20 ஆம் ஆண்டு அடிப்படை அளவுடன் ஒப்பிடும் போது 2021 ஆம் ஆண்டில் 6.3% மட்டுமே குறைந்துள்ளது.
  • COP 26 மாநாட்டில் சுமார் 145 நாடுகள் 2030 ஆம் ஆண்டிற்குள் காடுகளின் இழப்பு மற்றும் நிலச் சீரழிவை நிறுத்துவதற்கும் அவற்றை மாற்றுவதற்குமான தங்கள் உறுதிப் பாட்டை உறுதிப்படுத்தியுள்ளன.
  • ஆனால், 2030 ஆம் ஆண்டில் காடழிப்பை நிறுத்துவதற்கான ஒரு உலகளாவியக் குறிகாட்டியும் இதுவரை தேவையான போக்கில் செயல்படவில்லை.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் காடழிப்பை முற்றிலுமாக நிறுத்துவதற்கு, 10% வருடாந்திரக் குறைப்பு தேவையாகும்.
  • காடு வளர்ப்பு மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகள் பாராட்டுக்குரியதாக இருந்தாலும், வனங்கள் உருவாக்கப் படுவதை விட அதிக வனப்பகுதி இழக்கப்படுகிறது.
  • உலகளாவிய காடு இழப்பு 2021 ஆம் ஆண்டில் குறைந்துள்ளது என்றாலும், 2030 ஆம் ஆண்டிற்குள் காடழிப்பை நிறுத்தச் செய்வதற்கான முக்கியமான பருவநிலை இலக்கு பூர்த்தி செய்யப்படாது.
  • 2021 ஆம் ஆண்டில் காடுகளை அழிப்பதில் உலகின் மிகப்பெரியப் பங்களிப்பாளராக பிரேசில் இருந்தது.
  • கடந்த இருபது ஆண்டுகளில் உலகளாவிய மரங்களின் பரப்பளவு 130.9 மில்லியன் ஹெக்டேர் அதிகரித்துள்ளது.
  • உலக வனப்பரவல் அதிகரிப்பில் நான்கில் ஒரு பங்கு 13 நாடுகளில் பதிவாகியுள்ளது.
  • ரஷ்யா (28.4%), கனடா, அமெரிக்கா, பிரேசில் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் குறிப்பிடத் தக்க முன்னேற்றங்கள் பதிவாகின.
  • 2.1 மில்லியன் ஹெக்டேர் (Mha) பரப்பளவில் சீனாவில் மிக அதிக நிகர அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
  • இந்தியாவிலும் மரங்களின் பரப்பில் 0.87 மில்லியன் ஹெக்டேர் அதிகரித்துள்ளது.
  • 2018-20 ஆகிய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2021 ஆம் ஆண்டில் 28% காடழிப்பை காபோன் நாடு  குறைத்துள்ளது.
  • 2030 ஆம் ஆண்டு இலக்குகளை அடைவதற்கு வனப் பரவல் நிதியை 200 மடங்கு வரை அதிகரிக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்