TNPSC Thervupettagam

வனவிலங்குகள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல்

July 7 , 2019 1970 days 680 0
  • எதிர்ப்புச் சக்தியின் மூலம் கருத்தடை முறைகள் மற்றும் வன விலங்குகளில் நான்கு இனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றிற்காக ஒரு திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் தொடங்கியுள்ளது. அந்த நான்கு விளங்குகளாவன
    • யானைகள்
    • காட்டுப் பன்றி
    • குரங்குகள்
    • நீல மான்
  • இந்தத் தொழில்நுட்பம் பெண் விலங்குகள் கருவுறுதலைத் தடுப்பதற்கு, அதன் கருவுறு முட்டையைச் சுற்றிலும் புரதத்தை ஏற்படுத்துவதற்காக பெண் விலங்குகளின் நோய் எதிர்ப்பு அமைப்புகளைப் பயன்படுத்துகின்றது.
  • இந்தத் திட்டமானது மனித–வன விலங்கு மோதல்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடங்கப்பட்டு அதன்பின் மற்ற மாநிலங்களுக்கு நீட்டிக்கப்படும்.
  • இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் தேசிய நோய்த் தடுப்பியல் நிறுவனம் (National the Institute of Immunology) ஆகியவை இணைந்து எதிர்ப்புச் சக்தியின் மூலம் கருத்தடை நடைமுறைகளை மேம்படுத்தி இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்