எதிர்ப்புச் சக்தியின் மூலம் கருத்தடை முறைகள் மற்றும் வன விலங்குகளில் நான்கு இனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றிற்காக ஒரு திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் தொடங்கியுள்ளது. அந்த நான்கு விளங்குகளாவன
யானைகள்
காட்டுப் பன்றி
குரங்குகள்
நீல மான்
இந்தத் தொழில்நுட்பம் பெண் விலங்குகள் கருவுறுதலைத் தடுப்பதற்கு, அதன் கருவுறு முட்டையைச் சுற்றிலும் புரதத்தை ஏற்படுத்துவதற்காக பெண் விலங்குகளின் நோய் எதிர்ப்பு அமைப்புகளைப் பயன்படுத்துகின்றது.
இந்தத் திட்டமானது மனித–வன விலங்கு மோதல்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடங்கப்பட்டு அதன்பின் மற்ற மாநிலங்களுக்கு நீட்டிக்கப்படும்.
இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் தேசிய நோய்த் தடுப்பியல் நிறுவனம் (National the Institute of Immunology) ஆகியவை இணைந்து எதிர்ப்புச் சக்தியின் மூலம் கருத்தடை நடைமுறைகளை மேம்படுத்தி இருக்கின்றன.