TNPSC Thervupettagam

வனவிலங்கு தடயவியல் நிபுணத்துவ அமைப்பு

October 18 , 2024 36 days 122 0
  • வண்டலூரில் உள்ள மேம்பட்ட வனவிலங்கு வளங்காப்பு நிறுவனம் (AIWC) ஆனது தென் இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வமாக அரசு அறிவியல் நிபுணராக அங்கீகரிக்கப் பட்ட முதல் நிறுவனமாக மாறியுள்ளது.
  • இந்த நிறுவனம் ஆனது தமிழ்நாடு வனத்துறையால் 2017 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இந்த அங்கீகாரத்தின் மூலம், இந்த நிறுவனம் ஆனது தமிழ்நாடு வனத் துறைக்கு தடயவியல் சார்ந்த சேவைகளுக்கு ஆதரவளித்து, அண்டை மாநிலங்களின் வனம் மற்றும் வனவிலங்குத் துறைகளுக்கு தடயவியல் பகுப்பாய்வு சார்ந்த உதவிகளை வழங்கி, இப்பிராந்தியத்தில் வனவிலங்கு சட்ட அமலாக்கத்தை மேம்படுத்துகிறது.
  • இதுவரையில், இந்தியாவில் நான்கு நிறுவனங்கள் மட்டுமே உயிரியல் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வதற்கான வசதிகளைக் கொண்டுள்ளன:
    • இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII),
    • இந்திய விலங்கியல் ஆய்வு அமைப்பு,
    • இந்திய தாவரவியல் ஆய்வு அமைப்பு மற்றும்
    • இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி சபை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்