அமெரிக்காவின் யேசோமைட் தேசியப் பூங்காவின் கிழக்கில் அமைந்துள்ள கடின வாழ்வு சூழலுடைய (in hospitable) கலிபோர்னியா ஏரியில் செழித்தோங்கும் ஓர் சிறிய ஈக்களே வன் கார / களர் ஈக்கள் (Alkali Flies) ஆகும்.
இந்த ஏரி பெருங்கடலைப் போன்று மூன்று மடங்கு உவர்ப்பையும், உயர் அளவிலான PH-ம், அதிக அளவிலான சோடியம் கார்பனேட்டையும், போராக்ஸைட்டையும் கொண்டதால் பெரும்பாலும் எண்ணெயைப் போலான நீரை உடையது.
அதனால் இந்த வன்கார ஈக்களால் ஈரமடையாமல் நீரில் மூழ்கி வர இயலும்.
இந்த கார ஈக்கள் கடுமையான உவர்ப்பும், காரத்தன்மையும் உள்ள நீரை மொய்க்கவல்லது. இருப்பினும் நீரை விட்டு வெளிவரும் போது ஈரமடையாமலே இருக்கும்.
6 மி.மீட்டர் (ஒரு இன்ச்சில் கால் பங்கு) நீளமுடைய இந்த வன்கார வண்டுகள் சிறப்பு மெழுகுடன் கூடிய பெரும் எண்ணிக்கையிலான நேர்த்தியான மயிரிழைகளைக் கொண்டவை.
இவை ஈக்களின் உடலை இறுக அணைத்து குமிழ் வடிவத்தில் மூடுவதால் நீரில் மூழ்கும் போது ஈரமாகாமல் தடுக்கின்றன.