TNPSC Thervupettagam

வன்னியருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

November 10 , 2021 1116 days 819 0
  • மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த வன்னியர் சமுதாயத்திற்கு இந்த வகுப்பின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்ட  20% ஒதுக்கீட்டிற்குள் உள் ஒதுக்கீடாக 10.5% இட ஒதுக்கீடை வழங்குவதற்கான தமிழக அரசின் சட்டத்தினை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.
  • இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக உள்ளது என்று உயர் நீதிமன்றம் கருதியது.
  • மாநில அரசிற்கு உள் இட ஒதுக்கீடு அளித்திட அதிகாரம் தரப் படவில்லை என்று அது கூறியது
  • எவ்வித தெளிவான சாதிக் கணக்கெடுப்பு இல்லாத போது எவ்வாறு அந்த சதவிகிதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டது என்று அது கேள்வி கேட்டுள்ளது.
  • இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும்  இந்த உத்தரவானது, இந்த ஒதுக்கீட்டின் கீழ் ஏற்கனவே கல்வி நிறுவனங்களில் சேர்ந்தவர்களின் சேர்க்கையைப் பாதிக்காது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

பின்னணி

  • மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இடஒதுக்கீட்டிற்குள் வன்னியர்களுக்கு என்று 10.5% இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஒரு சட்டமானது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  26 ஆம் தேதி  அன்று முந்தைய அதிமுக அரசால் அறிவிக்கப்பட்டது.
  • திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான தற்போதைய அரசு இந்த  இட ஒதுக்கீட்டினை  முழுமையாக அமல்படுத்த ஆணை ஒன்றைப் பிறப்பித்தது.

 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்