TNPSC Thervupettagam

வன்முறையினால் ஏற்பட்ட மரணங்களின் சர்வதேச பதிவு

May 6 , 2019 1936 days 582 0
  • ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனமானது (SIPRI - Stockholm International peace research institute) வன்முறையினால் ஏற்பட்ட மரணங்களின் சர்வதேச பதிவு எனும் புதிய முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
  • இது உலகளாவிய அளவில் வன்முறைகளால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது அனைத்து வகையான வன்முறைகளாலும் ஏற்படும் இறப்புகளைக் கணக்கிட்டு திறந்த நிலை தரவு தளத்தில் வெளியிடும்.
  • இது 2030 ஆம் ஆண்டுக்குள் “அனைத்து வகையான வன்முறைகளையும் அது சம்பந்தப்பட்ட இறப்பு விகிதங்களையும் குறைப்பது” என்ற உலக நாடுகளின் இலக்கில் (SDG – இலக்கு 16) ஏற்படும் முன்னேற்றத்தைக் கண்காணிக்க உதவுகிறது.
  • இந்த தரவு தளமானது நேரம், இடம், குற்றவாளி, பாதிக்கப்பட்டவர் மற்றும் வன்முறையின் வகை உட்பட அனைத்து வகையான வன்முறையினால் ஏற்பட்ட இறப்புகளையும் உள்ளடக்கியது ஆகும்.
  • இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு ஸ்வீடனின் போஸ்ட்கோடு அறக்கட்டளையினாலும் ஐக்கிய ராச்சியத்தின் சர்வதேச மேம்பாட்டுத் துறையினாலும் நிதியளிக்கப்படுகிறது.
SIPRI
  • ஸ்வீடனை அடிப்படையாகக் கொண்ட இந்த சர்வதேச அமைப்பானது 1966 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • இது மோதல்கள், ஆயுதங்கள், ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் ஆயுதக் குறைப்பு ஆகியவற்றின் மீது ஆய்வு மேற்கொள்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது.
  • இது திறந்த நிலை ஆதாரங்களின் அடிப்படையில் கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள், ஊடகங்கள் மற்றும் ஆர்வமுள்ள பொதுமக்களுக்கு தரவுகள், பகுப்பாய்வு மற்றும் பரிந்துரைகளை வழங்குகிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்