TNPSC Thervupettagam

வன உயிரினங்களை நிலையான முறையில் பயன்படுத்துதல்

July 18 , 2022 734 days 360 0
  • பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் (IPBES) பற்றிய அரசுகளுக்கு இடையேயான அறிவியல்-கொள்கை தளம் ஆனது சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
  • உலகளாவிய பல்லுயிர்ப் பெருக்க நெருக்கடிகள் அதிகரித்து வருவதனால், ஒரு மில்லியன் வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள் அழிவை எதிர்கொள்வதாக இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
  • இந்த மதிப்பீடு ஆனது வன உயிரினங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற மீன் பிடித்தல், ஒட்டு மொத்தமாக மீன் பிடித்தல், மரம் வெட்டுதல், நிலப்பரப்பு விலங்கு வேட்டை ஆகிய ஐந்து வகை நடைமுறைகளைப் பட்டியலிட்டுள்ளது.
  • உலகின் ஏழ்மையான மக்கள்தொகையில் 70 சதவீதத்தினர் நேரடியாக வன உயிரினங்களைச் சார்ந்துள்ளனர்.
  • 20 சதவீதத்தினர் வனத் தாவரங்கள், பாசிகள் மற்றும் பூஞ்சைகளில் இருந்து உணவினைப் பெறுகின்றனர்.
  • சுமார் 34% ஆழ்கடல் மீன்கள் அதிகமாக பிடிக்கப்படுவதோடு உயிரியல் ரீதியாக உள்ள நிலையான மட்டத்தில் வாழும் 66% மீன்கள் பிடிக்கப் பட்டு விட்டன.
  • மதிப்பிடப்பட்ட 12% வன மரங்களின் வாழ்நாளானது நீடித்து நிலைக்க முடியாத அளவிற்கு மரங்களை வெட்டுவதால் அச்சுறுத்தல் நிலையில் உள்ளன.
  • வன உயிரினங்களின் சட்டவிரோத வர்த்தகமானது அனைத்து வகையிலானச் சட்ட விரோத வர்த்தகத்திலும் மூன்றாவது பெரிய வர்த்தகமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்