சமீபத்தில் மத்தியப் பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சகமானது (MoTA - Ministry of Tribal Affairs) வன உரிமைகள் சட்டம், 2006ன் (FRA - Forest Rights Act) கீழ் சமூக வனவளங்கள் (CFR - Community Forest Resources) குறித்த ஒரு குழுவை அமைத்துள்ளது.
இந்த அமைச்சகமானது அந்தக் குழுவை இந்தியத் திட்டக் குழுவின் முன்னாள் தலைவர் மற்றும் தேசிய ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவரான NC சக்சேனா என்பவரின் கீழ் அமைத்துள்ளது.
FRA-ன் கீழ் உள்ள CFR உரிமையானது பழங்குடியினரின் வனத்தைப் பாதுகாக்க மற்றும் நிர்வகிக்க கிராம சபைக்கு அதிகாரம் வழங்குகின்றது.
2016 ஆம் ஆண்டில், CFR வழிகாட்டுதல்களானது மத்திய சுற்றுச்சுழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் ஆலோசனையுடன் MoTAயினால் தயாரிக்கப் பட்டுள்ளது.
இதற்கு முன்பு மத்தியப் பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சகமானது குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களுக்கு (PVTG - Particularly Vulnerable Tribal Groups) ஒரு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குவதற்காக ஒரு குழுவை ஏற்படுத்தியிருந்தது.
இது MoTA-ன் முன்னாள் செயலாளரான ருசிகேஷ் பண்டா என்பவரால் தலைமை தாங்கப் பட்டது.
இந்தக் குழுவின் உறுப்பினர்கள் ஜம்மு காஷ்மீர், ஒடிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்குச் செல்ல முடிவு செய்திருந்தனர்.
FRA-ன் கீழ், வாழ்விட உரிமைகள் ஆனது PVTGகள் மற்றும் முந்தைய அல்லது மரபுசார் வேளாண் சமூகங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. இது அவர்களது வாழ்விடங்களாக அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளில் வனங்களை அணுகுவதற்கான அனுமதியை அவர்களுக்கு வழங்குகின்றது.