TNPSC Thervupettagam

வன உரிமைகள் சட்டத்தின் மாற்றங்கள்

October 3 , 2020 1424 days 697 0
  • மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வன உரிமைகள் சட்டம், 2006 என்பதை  மாற்றியமைப்பதற்கான ஓர் அறிவிக்கையை வெளியிட்டுள்ளார்.
  • இந்த அறிவிக்கையானது இந்திய அரசியலமைப்பின் அட்டவணை 5ன் கீழ் உள்ள தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த மாற்றங்கள் பழங்குடியினர் மற்றும் இதர பாரம்பரியமான வனவாசிக் குடும்பங்கள் வனப் பகுதிகளுக்கு அருகில் வீடுகளைக் கட்டிக் கொள்வதற்கு அனுமதிக்கின்றது.
  • இந்த முடிவானது அம்மாநிலத்தில் பட்டியலிடப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் இதர பாரம்பரிய வனவாசிக் குடும்பங்களுக்கு வேண்டிய ஒரு முக்கியமான நிவாரணத்தை அளிக்கின்றது.

5வது அட்டவணை

  • அரசியலமைப்பின் 5வது அட்டவணையானது அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் பட்டியலிடப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டை மேலாண்மை செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்