TNPSC Thervupettagam

வயநாட்டில் X-அலைவரிசை ரேடார்

October 24 , 2024 8 days 96 0
  • மத்தியப் புவி அறிவியல் அமைச்சகம் ஆனது கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் X-அலை வரிசையிலான ரேடாரை நிறுவுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தச் சாதனமானது, அதனைச் சுற்றியுள்ளப் பொருட்களின் தூரம், வேகம் மற்றும் இயற்பியல் பண்புகளைத் தீர்மானிக்க ரேடியோ அலைகளைப் பயன்படுத்துகிறது.
  • டாப்ளர் ரேடார் கருவியானது, கதிர்வீச்சின் அலைநீளத்தை விட சிதறல் அலைநீளம் மிகவும் சிறியதாக இருக்கும் ரெய்லே சிதறலைச் சார்ந்துள்ளது.
  • X-அலைவரிசை ரேடார் என்பது மின்காந்த நிறமாலையின் X-அலைவரிசையில் கதிர் வீச்சை வெளியிடும் ரேடார் கருவியாகும் என்பதோடு இது சுமார் 8-12 ஜிகாஹெர்ட்ஸ் அளவில் சுமார் 2 முதல் 4 சென்டி மீட்டர் அலைநீளங்களுடன் தொடர்புடையது.
  • சிறிய அலைநீளங்கள் என்பவை ரேடார் கருவியினை அதிக தெளிவுத்திறன் கொண்ட படங்களை உருவாக்க உதவுகின்றன.
  • X-அலைவரிசை ரேடார்கள் ஒப்பீட்டளவில் குறுகிய வரம்பைக் கொண்டுள்ளன.
  • புதிய ரேடார் கருவியானது, நிலச்சரிவு எச்சரிக்கைகளைத் தெரிவிப்பதற்காக, மண் போன்ற துகள்களின் இயக்கங்களைக் கண்காணிக்க முடியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட X-அலைவரிசை சார்ந்த புயல் கண்டறிதல் ரேடார் கருவியானது 1970 ஆம் ஆண்டில் புது டெல்லியில் நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்