TNPSC Thervupettagam

வயோசிரேஸ்த சம்மன் – 2019: முதியோருக்கான விருதுகள்

October 5 , 2019 1759 days 704 0
  • மூத்த குடிமக்களின் நலனை நோக்கிய நபர்களின் சேவைகளை அங்கீகரிப்பதற்காக தலைசிறந்த மூத்த குடிமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 2019 ஆம் ஆண்டின் வயோசிரேஸ்த சம்மன் என்ற விருதினை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
  • வயோசிரேஸ்த விருதானது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.
  • அக்டோபர் 1 ஆம் தேதி சர்வதேச முதியோர் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
  • இந்த விருதுகள் 13 பிரிவுகளில் வழங்கப் படுகின்றன. இந்த விருதுகள் 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன.
  • இந்த விருதுகள் 2013 ஆம் ஆண்டில் தேசிய விருதுகள் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்