TNPSC Thervupettagam

வரலாற்றில் அதிக செல்வாக்கு மிகுந்த பெண் - BBC

August 15 , 2018 2296 days 720 0
  • BBC வரலாற்று இதழினால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு மூலம் நோபல் பரிசு பெற்றுள்ள அறிவியலாளர் மேரி கியூரி வரலாற்றில் அதிக செல்வாக்கு மிகுந்த பெண்ணாக விருது பெற்றுள்ளார்.
  • வரலாற்று அறிவியலுக்கான பிரிட்டிஷ் சங்கத்தின் தலைவர் பட்ரிசியா ஃபரா மேரி கியூரியினை பரிந்துரை செய்தார்.
  • மேரி கியூரி 1903 மற்றும் 1911 ஆகிய வருடங்களில் முறையே இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகியவற்றுக்கான நோபல் பரிசினை வென்றுள்ளார்.
  • மேரி கியூரி,
    • இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் ஆவார்.
    • பிரான்சின் சோர்போனில் பணியாற்றிய முதல் பெண் பேராசிரியர் ஆவார்.
    • இரண்டு நோபல் பரிசுகளை வென்ற முதல் பெண் ஆவார்.
    • இரண்டு அறிவியல் பிரிவுகளில் நோபல் பரிசு வென்ற முதல் நபர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்