TNPSC Thervupettagam

வரலாற்றுக்கு முந்தைய காலப் பாறை ஓவியங்கள்

January 21 , 2024 180 days 277 0
  • தொல்லியல் துறையானது, விழுப்புரத்தில் உள்ள ஆலம்பாடி, மேல்வாலை, செத்தவரை கிராமங்களில் உள்ள வரலாற்றுக்கு முந்தைய காலப் பாறை ஓவியங்கள் கொண்ட மலைகள் முழுவதையும் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவித்துள்ளது.
  • விழுப்புரத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள மேல்வாலை எனும் கிராமம், வரலாற்றுக்கு முந்தைய பாறைக் கலையின் பொக்கிஷம் ஆகும்.
  • ரத்தப்பாறை என்ற சொல் செங்கற்காவி கொண்டு வரையப்பட்ட பாறைக் கலையை ஒத்ததாக உள்ளது.
  • மேல்வாலையில் உள்ள ஓவியங்கள் கி.மு. 3000 ஆண்டிற்கு முந்தையவையாகும்.
  • இதில் உள்ள ஓவியங்கள் மனித உருவங்கள், விலங்குகள் மற்றும் குறியீடுகள் ஆகும்.
  • மேல்வாலை மற்றும் செத்தவரை தளங்கள் முறையே 4.26 மற்றும் 110.79 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ளது.
  • ஆலம்பாடியில், செத்தவரையில் காணப்படும் செங்கற்காவி மற்றும் வெண்கற்காவி நிறத்தில் உள்ள வரலாற்றுக்கு முந்தைய காலத்தியப் பாறை ஓவியங்களின் கலவை கொண்ட ஓவியங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்