இந்திய அரசானது, உள்நாட்டுத் தொழில்துறைகள் மற்றும் வேளாண்மைக்குப் பாதகம் விளைவிக்காமல் அமெரிக்க இறக்குமதிகளுக்கான சில இறக்குமதி வரிகளை நீக்கக் கூடிய வரி வழிகளை (அல்லது தயாரிப்பு வகைகளை) அடையாளம் காணுமாறு உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (GTRI) அரசாங்கத்திடம் ஒரு பரிந்துரை செய்துள்ளது.
மிகவும் கடுமையான வரி உயர்வுகளைத் தடுப்பதற்காக 90 சதவீதத் தொழில்துறை பொருட்களின் மீதான வரிகளை நீக்கி, அமெரிக்க இறக்குமதிக்கு zero-for-zero என்ற உத்தியை இந்தியா முன்மொழியலாம்.
'zero-for-zero' என்ற வரி உத்தியானது உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிகளை மீறினாலும், "முழு FTA பேச்சுவார்த்தையுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவான பாதகத்தினையே விளைவிக்கும்.
அமெரிக்கா ஒரு மிகவும் சமச்சீரான (ஒரே மாதிரியான) வரியை விதித்தால், இந்திய ஏற்றுமதிகள் ஆனது தற்போதைய 2.8 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 4.9 சதவீத கூடுதல் வரியை எதிர்கொள்ள நேரிடும்.
இதனால் இறால், பால் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மீது 38.2 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்பதால் இந்திய வேளாண் ஏற்றுமதிகள் "கடுமையாக" பாதிக்கப் படும்.
அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும் இந்திய வேளாண் ஏற்றுமதிகள் மீது தற்போது சுமார் 5.3 சதவீத வரி விதிக்கப்படுகின்ற அதே நேரத்தில் இந்தியாவிற்கான அமெரிக்க வேளாண் ஏற்றுமதிகள் மீது 37.7 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகின்றன.