2019 ஆம் ஆண்டு மே 21 அன்று மார்ஷல் தீவுடன் வரிப் பரிமாற்ற ஒப்பந்தம் (TIEA - tax information exchange agreement) ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக இந்தியா அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது வரி தொடர்பான விவகாரங்கள் மீதான தகவல் பரிமாற்றத்திற்காக ஒரு சிறந்த கட்டமைப்பை அளிக்கின்றது. இது வரி ஏய்ப்பு மற்றும் வரித் தவிர்ப்பு ஆகியவற்றைத் தடுக்க உதவும்.
மார்ஷல் தீவுகள் ஹவாய் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்குகிடையே, பசுபிக் கடலில் உள்ள எரிமலைத் தீவுகள் மற்றும் பவளத் தீவுகளின் சங்கிலித் தொடராகும்.