இது வரி நீதி என்ற அமைப்பின் இம்மாதிரியான முதல் வருடாந்திர அறிக்கையாகும்.
சர்வதேசப் பெருநிறுவனங்களின் வரி மோசடி மற்றும் தனியார் வரி ஏய்ப்பு ஆகியவற்றால் உலகின் ஒவ்வொரு நாடும் எவ்வளவு வரியை இழக்கிறது என்பதை இது வெளிப்படுத்துகிறது.
இது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைமையில், சுரண்டல் மற்றும் இலாப மாற்றத் திட்டத்தின் (base erosion and profit shifting project) கீழ் தயாரிக்கப் பட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும், உலக நாடுகள் 427 பில்லியனுக்கும் அதிகமான அளவில் வரியை இழந்து வருவதாக இது கண்டறிந்துள்ளது.
இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளன.
இந்தியா மற்ற நாடுகளிடம் 70000 கோடியை வரியாக இழந்து வருகிறது.