2021-22 ஆம் ஆண்டிற்கான வரி வருவாய் ஆனது மத்திய நிதிநிலை அறிக்கையின் மதிப்பீட்டை விட ரூ.5 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
மத்திய நிதி நிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்ட ரூ.22.17 லட்சம் கோடிக்குப் பதிலாக, நிகழ்நேர மதிப்பீட்டிற்கு முந்தையப் புள்ளி விவரங்களின்படி வருவாய் வசூல் ரூ.27.07 லட்சம் கோடியாக உள்ளது.
2020-21 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ.20.27 லட்சம் கோடியை விட 2021-22 ஆம் ஆண்டில் பதிவான வரி வருவாய் 34 சதவீதம் அதிகமாகும்.