TNPSC Thervupettagam

வருடாந்திரக் காற்று தர வாழ்நாள் இழப்புக் குறியீடு

September 6 , 2023 445 days 275 0
  • சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம் ஆனது வருடாந்திரக் காற்று தர வாழ்நாள் இழப்புக் குறியீட்டு (AQLI) அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • தற்போதைய காற்று மாசுபாட்டின் நிலையானது உலக மனித ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத் தக்க அச்சுறுத்தலாக உள்ளது என்று இந்த அறிக்கை கூறுகிறது.
  • நுண்ணியத் துகள் மாசுபாடு (PM2.5) குறித்த உலக சுகாதார அமைப்பின் வழி காட்டுதல்களை ஏற்பது உலகளவில் மக்களின் ஆயுட்காலத்தினை 2.3 ஆண்டுகள் வரை நீட்டிப்பதற்கு உதவும் என்பதை அறிக்கை எடுத்துரைக்கிறது.
  • இது மொத்தமாக 17.8 பில்லியன் ஆண்டுகள் ஆயுட்காலத்தினைப் பாதுகாக்க வழி வகுக்கும்.
  • வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், சீனா, நைஜீரியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் தான் மக்களின் ஆயுட்காலம் மீது காற்றுத் தரத்தினால் ஏற்படும்  அதிகளவிலான தாக்கம் பதிவாகியுள்ளது.
  • இந்த 6 நாடுகளும் ஆயுட்காலம் மீதான காற்று மாசுபாட்டின் தாக்கம் அதிகம் காணப் படும் மையப்பகுதிகளாகும்.
  • இந்த நாடுகளில், குடிமக்கள் மாசுபட்ட காற்றினைச் சுவாசிப்பதன் காரணமாக ஒன்று முதல் ஆறு வருடங்கள் வரையிலான வாழ்நாள் இழப்பு பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்