வருடாந்திர இந்தியாவின் நகர அமைப்புகள் கணக்கெடுப்பு (ASICS)
March 19 , 2018 2446 days 804 0
குடியுரிமை மற்றும் ஜனநாயகத்திற்கான ஜனக்கிரஹா மையத்தின் (Janaagraha Centre for Citizenship and Democracy) இந்தியாவின் நகர அமைப்புகளுக்கான வருடாந்திர கணக்கெடுப்பின் 5-வது அறிக்கை (Annual Survey of India’s City Systems-ASICS ) அண்மையில் வெளியிடப்பட்டது.
நகர அமைப்புகளை மதிப்பிடுவதன் மூலம், நீண்ட கால அடிப்படையில் உயர் தரமான உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவதில் நகரங்களினுடைய தயார்தன்மையை (Preparedness) அளவிடுவதே இந்த கணக்கெடுப்பின் நோக்கமாகும்.
நகர்ப்புற ஆளுமையின் (Urban Governance) அடிப்படையில் புனே, கொல்கத்தா, திருவனந்தபுரம் ஆகிய நகரங்கள் முன்னணி இடத்தில் உள்ளன.
டெல்லி மற்றும் மும்பை ஆகியவை முறையே 6வது மற்றும் 9 இடத்தில் உள்ளன.
நடுத்தர நகரங்களுள் அதாவது ஒரு மில்லியன் வரையில் மக்கள்தொகை கொண்ட நகரங்களின் முதல் 10 இடங்களுள் ராஞ்சி உள்ளது.
இப்பட்டியலில் திட்டமிட்ட நகரங்களாகக் (Planned Cities) கருதப்படும் பெங்களூரு மற்றும் சண்டிகர் ஆகியவை கடைசி இடத்தில் உள்ளன.
ஆளுமையினுடைய 4 முக்கியக் கூறுகளின் மீது மொத்தம் 1 முதல் 10 வரையிலான மதிப்பெண் வரம்பில், அரசினுடைய பொலிவுறு நகரங்கள் திட்டத்தில் பங்கு வகிக்கின்ற பெரும்பாலான நகரங்கள் உட்பட மொத்தம் 23 நகரங்கள் இப்பட்டியலில் 3 முதல்1 மதிப்பெண்ணிற்கு இடைப்பட்ட மதிப்புகளையேப் பெற்றுள்ளன.