TNPSC Thervupettagam

வருடாந்திர இந்தியாவின் நகர அமைப்புகள் கணக்கெடுப்பு (ASICS)

March 19 , 2018 2446 days 803 0
  • குடியுரிமை மற்றும் ஜனநாயகத்திற்கான ஜனக்கிரஹா மையத்தின் (Janaagraha Centre for Citizenship and Democracy) இந்தியாவின் நகர அமைப்புகளுக்கான வருடாந்திர கணக்கெடுப்பின் 5-வது அறிக்கை (Annual Survey of India’s City Systems-ASICS ) அண்மையில் வெளியிடப்பட்டது.
  • நகர அமைப்புகளை மதிப்பிடுவதன் மூலம், நீண்ட கால அடிப்படையில் உயர் தரமான உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவதில் நகரங்களினுடைய தயார்தன்மையை (Preparedness) அளவிடுவதே இந்த கணக்கெடுப்பின் நோக்கமாகும்.
  • நகர்ப்புற ஆளுமையின் (Urban Governance) அடிப்படையில் புனே, கொல்கத்தா, திருவனந்தபுரம் ஆகிய நகரங்கள் முன்னணி இடத்தில் உள்ளன.
  • டெல்லி மற்றும் மும்பை ஆகியவை முறையே 6வது மற்றும் 9 இடத்தில் உள்ளன.
  • நடுத்தர நகரங்களுள் அதாவது ஒரு மில்லியன் வரையில் மக்கள்தொகை கொண்ட நகரங்களின் முதல் 10 இடங்களுள் ராஞ்சி உள்ளது.
  • இப்பட்டியலில் திட்டமிட்ட நகரங்களாகக் (Planned Cities) கருதப்படும் பெங்களூரு மற்றும் சண்டிகர் ஆகியவை கடைசி இடத்தில் உள்ளன.
  • ஆளுமையினுடைய 4 முக்கியக் கூறுகளின் மீது மொத்தம் 1 முதல் 10 வரையிலான மதிப்பெண் வரம்பில், அரசினுடைய பொலிவுறு நகரங்கள் திட்டத்தில் பங்கு வகிக்கின்ற பெரும்பாலான நகரங்கள் உட்பட மொத்தம் 23 நகரங்கள் இப்பட்டியலில் 3 முதல்1 மதிப்பெண்ணிற்கு இடைப்பட்ட மதிப்புகளையேப் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்