TNPSC Thervupettagam

வருடாந்திர இந்திய காசநோய் அறிக்கை 2024

April 1 , 2024 109 days 266 0
  • இந்திய அரசின் முயற்சிகளால் 2015 ஆம் ஆண்டு முதல் காசநோய் பாதிப்பு சுமார் 16% சதவீதமும் (ஒவ்வோர் ஆண்டும் புதிய பாதிப்புகள் பதிவாகின்றன) மற்றும் காச நோயால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் சுமார் 18% சதவீதமும் குறைந்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் சுமார் 2.3 லட்சம் கண்டறியப்படாத மற்றும் பதிவு செய்யப்படாத பதிவுகள் இருந்தன என்ற நிலையில், இது அதற்கு முந்தைய ஆண்டில் 3.2 லட்சமாக இருந்தது என்று அறிக்கை கூறுகிறது.
  • அரசாங்கத்தின் Ni-kshay என்ற இணைய தளமானது அனைத்து வகை காசநோய் நோயாளிகளையும் கண்காணித்து வருவதையடுத்து இந்த இடைவெளியானது பல ஆண்டுகளாக குறைந்து வருகிறது.
  • 2023 ஆம் ஆண்டில் பதிவான சுமார் 25.5 லட்சம் பாதிப்புகளில் 33% அல்லது 8.4 லட்சம் பாதிப்புகள் தனியார் துறையினால் பதிவு செய்யப்பட்டவை.
  • இதனை ஒப்பிடுகையில், 2015 ஆம் ஆண்டில் தனியார் துறையில் சுமார் 1.9 லட்சம் பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
  • முந்தைய ஆண்டில் 27.4 லட்சமாக இருந்த காசநோய்ப் பாதிப்பு ஆனது, 2023 ஆம் ஆண்டில் 27.8 லட்சமாக சற்று அதிகரித்துள்ளது.
  • சமீபத்தியத் தரவுகளின்படி, நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் ஆனது 3.2 லட்சமாக இருந்தது.
  • இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் 4.94 லட்சமாக இருந்த காசநோய் உயிரிழப்பு ஆனது, 2022 ஆம் ஆண்டில் 3.31 லட்சமாகக் குறைந்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் முந்தைய மதிப்பீட்டு முறையின் படி மேற்கொள்ளப்பட்ட பல தரவுகளின் படி சுமார் 29.4 லட்சமாக இருந்த ஓராண்டில் பதிவான பாதிப்புகளின் எண்ணிக்கையானது 2022 ஆம் ஆண்டில் 27.4 லட்சமாகக் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்