வருடாந்திர இந்திய நிதித் தொழில்நுட்பம் குறித்த அறிக்கை 2024
January 18 , 2025 4 days 78 0
அமெரிக்கா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக நிதி தொழில் நுட்பப் பிரிவில் பெறப்பட்ட நிதிகளின் அடிப்படையில் இந்தியாவானது உலகளவில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
2024 ஆம் ஆண்டில் மொத்தம் 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் திரட்டப்பட்டதுடன், நிதித் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க சரிவுப் பதிவானது.
இது 2023 ஆம் ஆண்டில் பெறப்பட்ட 2.8 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியிலிருந்து 33 சதவீதம் குறைவாகும்.
இந்தத் துறையானது 2022 ஆம் ஆண்டில் சுமார் 5.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டியது.
2024 ஆம் ஆண்டில் மணி வியூ மற்றும் பெர்ஃபியோஸ் என்ற இரண்டு யூனிகார்ன் நிறுவனங்கள் தோன்றின.