ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் (UNODC), உலக போதைப்பொருள் தினத்தன்று இந்த அறிக்கையை வெளியிட்டது.
2022 ஆம் ஆண்டு வரையிலான கடந்த பத்தாண்டுகளில், சட்டவிரோத போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 292 மில்லியனாக அதிகரித்து உள்ளது.
உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்கள் - 228 மில்லியன் மக்கள் - கஞ்சாவை உட்கொள்கிறார்கள் என்ற நிலைமையில் அதைத் தொடர்ந்து ஓபியாய்டுகள், ஆம்பெடமைன்கள், கொகைன் மற்றும் எக்ஸ்டஸி போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.
நிட்டாசீன்களின் பயன்பாடு அதிகரித்ததைத் தொடர்ந்து அதிகப்படியான போதைப் பொருள் பயன்பாடு காரணமான உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.
2022 ஆம் ஆண்டில், கோக்கைன் உற்பத்தியானது 2,757 டன்கள் பதிவாகி சாதனை உச்சத்தைத் தொட்ட நிலையில், இது 2021 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
கனடா, உருகுவே மற்றும் அமெரிக்காவில் உள்ள 27 நிர்வாக அதிகார வரம்புகள் முழுவதும் கஞ்சா பயன்பாடு சட்டப்பூர்வமாக்கப் பட்டுள்ளது.