TNPSC Thervupettagam

வருடாந்திர கடவுச் சீட்டுக் குறியீடு

June 10 , 2018 2264 days 742 0
  • அண்மையில் வெளியிடப்பட்ட உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச் சீட்டுப் பட்டியலில் (list of the world's most powerful passports) இந்தியா 76-வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்தியா தனது கடவுச்சீட்டினைக் கொண்டோருக்கு 59 நாடுகளுக்கு நுழைவு இசைவு இல்லா அணுகலைத் (Visa-free access) தருகின்றது.
  • இந்த முடிவுகள் குடிமக்களுக்கென்று திட்டமிடும் நிறுவனமான, ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் வருடாந்திர கடவுச் சீட்டுக் குறியீட்டின் (Henley and Partners' annual passport index) ஒரு பகுதியாகும்.

  • இந்த வருடாந்திர கடவுச்சீட்டுக் குறியீடானது, கடவுச்சீட்டினைக் கொண்டோர் எத்தனை நாடுகளுக்கு அனுமதி இசைவு இல்லாமல் செல்ல முடியும் அல்லது கடவுச் சீட்டு உடையோர் பயண இடத்தை சென்று சேர்ந்தபின், அவ்விடத்தில் நுழைவு இசைவு (visa), வருகையாளர் அனுமதி (visitor's permit) அல்லது மின்னணு பயண அனுமதி (electronic travel authority) ஆகியவற்றை எத்தனை நாடுகளில் பெற முடியும் என்பதன் அடிப்படையில் உலக நாடுகளின் கடவுச்சீட்டுகளை தரவரிசைப்படுத்துகின்றது.
  • வருடாந்திர கடவுச்சீட்டுக் குறியீட்டின்படி, உலகில் 189 நாடுகளுக்கு தன்னுடைய கடவுச்சீட்டு உடையோருக்கு அணுகலை வழங்குகின்ற உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுடைய நாடு ஜப்பானாகும்.

 

நாடுகள் அணுகிடவல்ல நாடுகள் எண்ணிக்கை
1.     ஜப்பான் 189 நாடுகள்
2.     ஜெர்மனி, சிங்கப்பூர் 188 நாடுகள்
3.     டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், சுவீடன், தென்கொரியா 187 நாடுகள்
4.     நார்வே, இங்கிலாந்து, ஆஸ்திரியா, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, போர்ச்சுகல், அமெரிக்கா 186 நாடுகள்
5.     பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, கனடா 185 நாடுகள்

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்