TNPSC Thervupettagam

வருடாந்திர தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு

May 30 , 2024 49 days 126 0
  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமானது (MOSPI) சமீபத்திய வருடாந்திர தொழிலாளர் வளக் கணக்கெடுப்பினை (PLFS) வெளியிட்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டின் ஜனவரி-மார்ச் மாத காலாண்டில் நகர்ப்புறங்களில் 15-29 வயதிற்கு உட்பட்டவர்களிடையே மிக அதிக வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது கேரளாவில் பதிவாகி யுள்ளது.
  • ஜம்மு & காஷ்மீர், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் இந்த வயது பிரிவில் அதிக வேலைவாய்ப்பின்மை விகிதம் நிலவும் பிற மாநிலங்களாகும்.
  • மூன்று மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் ஒற்றை இலக்க வேலை வாய்ப்பின்மை விகிதங்களைக் கொண்டுள்ளன. அவையாவன: டெல்லி (3.1 சதவீதம்), குஜராத் (9 சதவீதம்), மற்றும் ஹரியானா (9.5 சதவீதம்).
  • கர்நாடகா (11.5 சதவீதம்) மற்றும் மத்தியப் பிரதேசம் (12.1 சதவீதம்) ஆகிய மாநிலங்களில் ஒப்பீட்டளவில் குறைந்த வேலைவாய்ப்பின்மை விகிதங்கள் பதிவாகி உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்