2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள குற்றவியல் அமர்வு நீதிமன்றங்கள் ஆனது 165 மரணத் தண்டனைகளை விதித்துள்ளன.
இது கடந்த 20 ஆண்டுகளில் பதிவானவரையில், ஓராண்டில் விதிக்கப்பட்ட மிக அதிகமான எண்ணிக்கையாகும்.
இந்த எண்ணிக்கை அதிகரிப்பானது, அகமதாபாத்தில் நிகழ்ந்த ஒரு குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக இருக்கலாம்.
இது 2016 ஆம் ஆண்டு முதல் பதிவான, ஒரே வழக்கில் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்ட நிகழ்வினைக் குறிக்கிறது.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்றைய நிலவரப்படி, 539 கைதிகள் மரணத் தண்டனை நிறைவேற்றப் படுவதற்கான பட்டியலில் உள்ளனர் என்று இந்த அறிக்கை குறிப்பிடச் செய்கிறது.
400 கைதிகள் மட்டுமே மரணத் தண்டனையை எதிர்நோக்கியதாக பதிவான 2016 ஆம் ஆண்டிலிருந்து, விதிக்கப்பட்ட மிக அதிக எண்ணிக்கையிலானதாக இந்த எண்ணிக்கை உள்ளது.
2022 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட மரணத் தண்டனைகளின் எண்ணிக்கையானது 2015 ஆம் ஆண்டில் பதிவானதை விட 40% அதிகரிப்பைக் குறிக்கிறது.
இந்தத் தகவல் ஆனது, ‘இந்தியாவில் மரணத் தண்டனை - வருடாந்திரப் புள்ளி விவரங்கள் 2022’ அறிக்கையின் ஒரு பகுதியாகும்.
திட்டம் 39A எனப்படும் இது டெல்லியின் தேசியச் சட்டப் பல்கலைக் கழகத்தின் ஆலோசனைக் குழுவினால் வெளியிடப்பட்டது.