திட்டம் 39A என்ற ஆலோசனை வழங்கீட்டுக் குழுவினால், ‘இந்தியாவில் மரண தண்டனைகள்: வருடாந்திரப் புள்ளிவிவரங்கள் 2023’ என்ற தலைப்பிலான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் ஒரு உயர் நீதிமன்றத்தினால் ஒரே ஒரு மரண தண்டனை மட்டுமே உறுதி செய்யப்பட்ட நிலையில், இது 2000 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் மேல் முறையீட்டு நீதிமன்றங்களில் பதிவான குறைவான விகிதத்தைக் குறிக்கிறது.
உறுதிப்படுத்தப்பட்ட கொலை (ஒரு நபரைத் திட்டமிட்டு வேண்டுமென்றே கொலை செய்தல்) வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஒரு மரண தண்டனையை உறுதி செய்தது.
2023 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் எந்தவொரு மரண தண்டனையையும் உறுதி செய்யவில்லை என்ற வகையில், 2021 ஆம் ஆண்டிற்குப் பிறகு இரண்டாவது முறையாக உச்ச நீதிமன்றத்தில் எந்த மரண தண்டனையும் உறுதி செய்யப் பட வில்லை.
2023 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றங்களில் நடைபெற்ற வழக்காடுதல்களில் மரண தண்டனையை உறுதிப்படுத்துவதற்கான தீர்ப்பு வழங்குதல் என்பது 15% குறைந்து உள்ளது குறிப்பிடத் தக்கது ஆகும்.
2022 ஆம் ஆண்டில் பதிவான 68 வழக்குகளுடன் ஒப்பிடும் போது 2023 ஆம் ஆண்டில் 57 மரண தண்டனை வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் இருந்ததை விட, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் மரண தண்டனையின் கீழ் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 45.71% அதிகரித்துள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளைப் போலவே, விசாரணை நீதிமன்றங்களில் வழக்காடப்படும் பெரும்பாலான மரண தண்டனை வழக்குகளானது பாலியல் குற்றங்கள் தொடர்பான குற்றங்களை உள்ளடக்கியது ஆகும்.