புள்ளிவிவர அமைச்சகம் ஆனது, ஒரு விரிவான வருடாந்திர மாதிரிக் கணக்கெடுப்பை வெளியிட்டுள்ளது (ஜூலை 2022-ஜூன் 2023).
கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் கடந்த 365 நாட்களில் மருத்துவமனையில் ஒரு குடும்பமானது அவர்களின் சொந்தப் பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட சராசரி மருத்துவச் செலவு 4,129 ரூபாய் மற்றும் 5,290 ரூபாய் ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடைசி 30 நாட்களில் மருத்துவமனை சாராதச் சிகிச்சைகளுக்காக ஒரு குடும்பத்தின் சராசரி மருத்துவச் செலவினமானது கிராமப்புறங்களில் 539 ரூபாயாகவும், நகர்ப் புறங்களில் 606 ரூபாயாகவும் இருந்தது.
15 முதல் 24 வயதிற்குட்பட்டவர்களில் சுமார் 96.9% பேர் எளிய கூற்றுக்களைப் படிக்கவும் மற்றும் எழுதவும் முடிந்தவர்களாகவும் எளிய எண்கணித கணக்கீடுகளைச் செய்யக் கூடியவர்களாகவும் உள்ளனர்.
அதே வயதினரில், இந்த எண்ணிக்கையானது ஆண்களில் 97.8% ஆகவும், பெண்களில் 95.9% ஆகவும் இருந்தது.
15 முதல் 24 வயதிற்குட்பட்டவர்களில் சுமார் 23.3% பேர் கல்வி, வேலைவாய்ப்பு அல்லது பயிற்சியினைப் பெறவில்லை.
95.1% வீடுகளில் தொலைபேசி அல்லது கைபேசி இணைப்பு இருந்தது என்பதோடு 9.9% வீடுகளில் கணினிகள் இருந்தன.
கிராமப்புறங்களில் 15 முதல் 24 வயதிற்குட்பட்டவர்களில், 95.7% பேர் கைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர் என்ற நிலையில் இது நகர்ப்புறங்களில் 97% ஆக இருந்தது.