இந்தியாவிலிருந்து மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் அவர் இந்தியா, வங்கதேசம், பூடான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்.
அக்கூட்டத்தில் அவர் இந்தியாவானது ஆத்ம நிர்பர் தொகுப்புத் திட்டத்தின் கீழ், ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் 13 சதவிகிதத்திற்கும் அதிகமான அளவாக 27.1 டிரில்லியன் ரூபாய் என்ற அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதை அறிவித்தார்.