TNPSC Thervupettagam

வருடாந்திர NeSDA முன்னேற்ற அறிக்கை 2023

February 21 , 2024 281 days 233 0
  • நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்பு துறை (DARPG) ஆனது 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர தேசிய மின்னாளுகை சேவை வழங்கீட்டு மதிப்பீடு (NeSDA) முன்னேற்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • NeSDA கட்டமைப்பின் கீழ் வழங்கப்படும் கட்டாய இணையச் சேவைகள் மற்றும் மொத்த இணையச் சேவைகளின் கீழ் இந்த ஆண்டில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் எட்டிய ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.
  • தற்போது 76% கட்டாய தேவையான இணைய சேவைகள் கிடைக்கப் பெறுகின்றன என்ற நிலையில் இது 2019 ஆம் ஆண்டு NeSDA மதிப்பீட்டின் கீழ் 48% ஆக இருந்ததை விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும்.
  • சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மொத்தம் 16,487 என்ற இணையதளச் சேவைகளை வழங்குகின்றன என்ற நிலையில் இது 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 11,614 ஆக இருந்தது.
  • அதிகபட்சமாக 1,117 இணையதளச் சேவைகளை வழங்கும் மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களின் பட்டியலில் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஒன்றியப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
  • ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசம் தவிர கேரளா, அசாம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் அந்தந்த ஒருங்கிணைந்த இணைய தளங்கள் மூலம் நூறு சதவீதம் இணையதளச் சேவைகளை வழங்குகின்றன.
  • 36 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களுள் 23 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் அனைத்து கட்டாய தேவையான இணையதளச் சேவைகளை வழங்குவதில் சுற்றுலாத் துறை அதிக நிறைவு நிலையினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்