ரீயூனியன் தீவுப் பகுதியில் (Reunion Island) இந்தியா மற்றும் பிரெஞ்ச் கடற்படைகளானது வருணா கடற்படை கூட்டுப்போர் பயிற்சியின் மூன்றாவது மற்றும் கடைசி கட்டத்தை நடத்தியுள்ளன.
இந்தியா மற்றும் பிரான்சிற்கு இடையேயான இருதரப்பு கடற்படை கூட்டுப் போர் பயிற்சியே வருணா (Varuna) ஆகும்.
ரீயூனியன் தீவானது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஓர் பிரெஞ்சு நிர்வகிப்பு நிலப் பகுதியாகும் (French administrative territory).
2018 – ஆம் ஆண்டிற்கான வருணா கூட்டுப்போர் பயிற்சியானது மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. இம்மூன்று கட்டங்கள் அரபிக்கடல், வங்கக்கடல், தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் என மூன்று கடற்பகுதியில் நடத்தப்பட்டுள்ளன.
1993-ஆம் ஆண்டிலிருந்து வருணா எனும் இந்த இருதரப்பு கடற்சார் கூட்டுப்போர் பயிற்சி நடத்தப்பட்டு வருகின்றது.
இந்தியா மற்றும் பிரெஞ்ச் நாட்டிற்கிடையேயான இருதரப்பு கூட்டுப் பயிற்சியானது 2001 ஆம் ஆண்டிலிருந்து வருணா எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றது.
இதுவரை வருணா கூட்டுப் பயிற்சியில் 15 பதிப்புகள் நடத்தப்பட்டுள்ளன.