March 22 , 2018
2443 days
739
- வருணா எனும் இந்தோ-பிரெஞ்ச் கடற்படை கூட்டுப்போர் பயிற்சி இவ்வாண்டு அரபிக் கடலில் கோவா கடற்கரையில் நடைபெற்றது.
- வருணா-18 கடற்படை கூட்டுப் பயிற்சியானது அரபிக் கடல், வங்கக்கடல், தென் மேற்கு இந்தியப் பெருங்கடல் என மூன்று கடற்பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.
- 2017-ஆம் ஆண்டிற்கான வருணா கூட்டுப்போர் பயிற்சியானது ஐரோப்பாவின் மூன்று கடற்பகுதியில் நடத்தப்பட்டது.
- மூன்று கட்டங்களாக இக்கூட்டுப் போர் பயிற்சி நடத்தப்படுகிறது.
- 1993-ஆம் ஆண்டிலிருந்து இந்தியக் கடற்படையும் பிரெஞ்ச் கடற்படையும் இந்த இருதரப்பு கடற்சார் கூட்டுப்போர் பயிற்சியை நடத்தி வருகின்றன.
- இந்தியா மற்றும் பிரெஞ்ச் நாட்டிற்கிடையேயான இரு தரப்பு கூட்டுப் பயிற்சியானது 2001-ஆம் ஆண்டிலிருந்து வருணா எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றது.
- இதுவரை வருணா கூட்டுப் பயிற்சியில் 15 பதிப்புகள் நடத்தப்பட்டுள்ளன.
Post Views:
739