TNPSC Thervupettagam

வருமானப் பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை

August 27 , 2024 88 days 93 0
  • உலகப் பொருளாதார மன்றமானது "வருமானப் பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை அமைப்புகள்: இந்தியா பருவநிலை நெகிழ்திறனை எவ்வாறு உருவாக்குகிறது" என்ற ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 2015 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் அதிக மழைப் பொழிவு காரணமாக இந்தியாவில் 33.9 மில்லியன் ஹெக்டேர் பயிர்களும், வறட்சி காரணமாக கூடுதலாக 35 மில்லியன் ஹெக்டேர் பயிர்களும் சேதமுற்றுள்ளன.
  • தீவிர பருவநிலைத் தாக்கங்களால் ஏற்பட்ட பணி நேர இழப்பினால் 2021 ஆம் ஆண்டில் வேளாண்மை உட்பட பல்வேறு இந்தியத் துறைகள் 159 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார இழப்பைச் சந்தித்தன.
  • 2030 ஆம் ஆண்டில், மிகவும் அதிக வெப்பத்தின் தாக்கம் காரணமாகப் பணி நேரத்தில் கணிசமாக 5.8 சதவீத (34 மில்லியன் முழு நேரப் பணி நேரத்திற்குச் சமமானது) சரிவை இந்தியா எதிர்கொள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • 2010 ஆம் ஆண்டு அகமதாபாத் நகரில் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலைக்குப் பிறகு தெற்காசியாவில் வெப்பத் தாக்கத் தணிப்பு நடவடிக்கைக்கான செயல் திட்டத்தினை உருவாக்கிய முதல் நாடு இந்தியாவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்